மேலும் செய்திகள்
வெள்ள நிவாரணம் எம்.எல்.ஏ., வழங்கல்
09-Dec-2024
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே வெள்ள நிவாரண தொகை பெறுவதற்காக வந்தவர்களில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் மயக்கமடைந்தனர்.திண்டிவனம் அடுத்த ஆலகிராமம் மேற்கு ரேஷன் கடையில் நேற்று பொதுமக்கள் வெள்ள நிவாரண தொகை 2000 ரூபாய் பெற ரேஷன் கார்டுதாரர்கள் ஏராளமானோர் திரண்டனர்.அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ஆலகிராமம் காலனி பகுதியைச் சேர்ந்த அர்ஜூனன், 68; ராணி, 70; ஜோதி, 41; ஆகிய மூவரும் மயங்கி விழுந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு முப்புளி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
09-Dec-2024