விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பெரிய ஏரியில் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான ஆகாய தாமரை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. விக்கிரவாண்டியில் பெரிய ஏரி, சிறிய ஏறி, அரண்டேரி என 300 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டிற்கு பிறகு ஏரி சீரமைக்கப்படாததால் பெரிய ஏரியில் ஆகாய தாமரை ஆக்கிரமித்து தண்ணீர் கொள்ளளவு குறைந்தது. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதை அடுத்து தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா துரித நடவடிக்கை எடுத்ததன் பேரில், ஆகாயத் தாமரை அகற்றும் பணி துவங்கியது. விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைக்கு துரித நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ.,வுக்கு ஏரி பாசன சங்க விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். பொதுப்பணித்துறை,கனிமவளத்துறை இணைந்து ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அருணகிரி உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர் கபிலன், செயல் அலுவலர் ஷேக் லத்திப், பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி. மாவட்ட தலைவர்கள் பாபு ஜீவானந்தம், ஹரிஹரன், நகர செயலாளர் நைனா முகமது, நகர தலைவர் தண்டபாணி, துணைச் செயலாளர்கள் சுரேஷ்குமார், பிரசாந்த், இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்தி. துணை அமைப்பாளர் சிவா, மாணவர் அணி அமைப்பாளர் யுவராஜ், சைபுல்லா, ஞானம், பாலகிருஷ்ணன், செல்வம், பேரூராட்சி கவுன்சிலர்கள், வி.சி., நகர அமைப்பாளர் சந்துரு உட்பட பலர் உடனிருந்தனர்.