கட்சி கொடி கம்பங்கள் அகற்றம்
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் கோர்ட் உத்தரவுபடி கட்சி கொடி கம்பங்களை பேரூராட்சி நிர்வாகம் அகற்றியது.சென்னை ஐகோர்ட் மதுரை கிளை, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கொடி கம்பங்களை அகற்ற கடந்த ஜனவரி 27ம் தேதி உத்தரவிட்டது. விக்கிரவாண்டியில் ஆளும் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிக் கொடி கம்பங்களை கட்சி நிர்வாகிகள் அகற்றிக் கொண்டனர். கோர்ட் அளித்த கெடு முடிந்தும் அகற்றாமல் இருந்த கொடி கம்பங்கள் பேரூராட்சி செயல் அலுவலர் ஷேக்லத்தீப் உத்தரவின் பேரில் இளநிலை உதவியாளர் ராஜேஷ், துப்புரவு மேற்பார்வையாளர் ராமலிங்கம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் குழுவினர் தேசிய நெடுஞ்சாலை, பஸ் நிலையம், தெருக்களில் அகற்றப்படாமல் இருந்த மற்ற கட்சி கொடி கம்பங்களை அகற்றி பேரூராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.