தாழ்வாக சென்ற மின்கம்பி சீரமைப்பு
திருவெண்ணெய்நல்லூர்: விவசாய பகுதியில் தாழ்வாக சென்ற மின்கம்பிகள் தினமலர் செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்டது. திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி தெற்கு பகுதியில் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர்களை பயிரிட்டு அறுவடை செய்து வருகின்றனர். அப்பகுதியில் விவசாய இணைப்புக்காக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த மின்கம்பங்கள் சாய்ந்து அதிலிருந்து செல்லக்கூடிய மின்கம்பிகள் தாழ்வாக சென்றன. இதனால் விவசாயிகள் நிலத்திற்கு அச்சத்துடனேயே சென்று வந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் தாழ்வாக சென்ற மின்கம்பிகளை சீரமைத்தனர்.