உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஏரியில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க கோரிக்கை

ஏரியில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க கோரிக்கை

செஞ்சி: செஞ்சி 'பி' ஏரியில் கோழிக்கழிவுகளை கொட்டுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ., சார்பில் மனு அளித்துள்ளனர்.நகர பா.ஜ., தலைவர் தங்க ராமு மற்றும் நிர்வாகிகள் செஞ்சி பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் பார்கவியிடம் அளித்துள்ள மனு:செஞ்சி 'பி'ஏரியில் இரவு நேரத்தில் கோழிக் கழிவு இறைச்சிகளைக் கொட்டி ஏரியை அசுத்தப்படுத்தி வருகின்றனர்.இதனால் ஏரியில் துர்நாற்றம் வீசுகிறது. மீன்கள் செத்து மிதக்கின்றன. இப்பகுதியில் சுகாதார சீர்கேடும் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுஉள்ளது.எனவே, கோழிக் கழிவுகளை ஏரியில் கொட்டும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ