உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் 15வது நாளாக ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம் நடந்தது. தேர்தல் வாக்குறுதிப்படி அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமலாக்க வேண்டும். கடந்த 25 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வுகால பண பலன்களை உடனே வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன் கடந்த 18ம் தேதி, ஓய்வுபெற்ற ஊழியர் நல அமைப்பு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழி லாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் துவங்கியது. கோரிக்கைகள் நிறைவேற அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து போராட்டம் நடக்கிறது. நேற்று 15வது நாளாக நீடித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ., மண்டல பொது செயலாளர் வேலு தலைமை தாங்கினார். கம்யூ., மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி