உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புரட்சி பாரதம் கட்சி ஆர்ப்பாட்டம்

புரட்சி பாரதம் கட்சி ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்; பெஞ்சல் புயல் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க தவறிய அரசை கண்டித்து புரட்சி பாரதம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தீபன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட அமைப்பாளர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் கமல், சந்தானபாரதி, தியாகராஜன் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர் குருவிழி வரவேற்றார். மாநில துணைச் செயலாளர் பூவையாறு கண்டன உரையாற்றினார்.மாவட்ட செயலாளர்கள் தமிழரசன், கஜேந்திரன், திருநாவுக்கரசு, கோபிநாதன், மனோ, விஜயன்தாஸ், ரஞ்சித், சதீஷ்குமார், கொள்கை பரப்பு செயலாளர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், பெஞ்சல் புயல் தாக்கம் 10 நாட்களுக்கு முன்பே தெரிந்தும், மக்களை பாதுகாக்க தவறிய தி.மு.க., அரசை கண்டிப்பது. முன்னறிவிப்பின்றி சாத்தனுார் அணையை திறந்துவிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ