மேலும் செய்திகள்
அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் மறியல்
03-Dec-2024
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அடுத்த மழவந்தாங்கல் ஊராட்சியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கண்டாச்சிபுரம் அடுத்த மழவந்தாங்கல் ஊராட்சியில் மின் மோட்டார் பழுது காரணமாக குடிநீர் விநியோகம் தடைபட்டது. கடந்த 2 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர்.இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மழவந்தாங்கல் - ஆலம்பூண்டி சாலையில் இன்று பிற்பகல் 2:10 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து 2:30 மணியளவில் மறியலை விலக்கிக் கொண்டனர்.அதனைத் தொடர்ந்து, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மின்மோட்டார் பழுதுநீக்கம் செய்யப்பட்டு உடனடியாக குடிநீர் வழங்கப்பட்டது.
03-Dec-2024