உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாலைகள் மறுசீரமைப்பு பணி துவக்கம்

சாலைகள் மறுசீரமைப்பு பணி துவக்கம்

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி பகுதியில் கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. விழுப்புரம் நகரில், கடந்த சிலதினங்களாக பெய்த கன மழையால், நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்தன. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து சாலைகளை போர்க்கால அடிப்படையில் மறு சீரமைப்பு பணி மேற்கொள்ள கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டார். இதன்படி, விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட சிங்கப்பூர் நகர், கீழ்பெரும்பாக்கம் பகுதி திருகுறிப்பு தொண்டர் நகர், அனிச்சம்பாளையம் சாலையில் உள்ள பாரதியார் ரோடு, லட்சுமி தெரு, ராகவன்பேட்டை பிரதான சாலை, ஆசிரியர் நகர், ஜெ.ஜெ. நகர் மற்றும் மகாதேவன் நகர் ஆகிய பகுதிகளில் சாலை மறு சீரமைப்பு பணி நடைபெற்றது. மேலும், விழுப்புரம் நகராட்சி முழுவதும் கனமழையால் சேர்ந்த குப்பைகளை உடனடியாக அகற்றும் பணி நகராட்சி கமிஷ்னர் வசந்தி மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை