மேலும் செய்திகள்
கார் மோதிய விபத்தில் லாரி டிரைவர் காயம்
06-May-2025
விழுப்புரம்: மயிலம் அடுத்த செண்டூரில் வீட்டின் கதவை உடைத்து ரூ. 1 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மயிலம் அருகே உள்ள செண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி தவமணி, 48; நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிக் கொண்டு அதே ஊரில் உள்ள தனது மகன் சந்தோஷ் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை தனது வீட்டிற்கு திரும்பினார். அப்பொழுது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து தவமணி கொடுத்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
06-May-2025