ஆர்.எஸ்.எஸ்., நூற்றாண்டு விழா
செஞ்சி; வளத்தியில் ஆர்.எஸ்.எஸ்., நூற்றாண்டு விழா பயிற்சி முகாம் நடந்தது. மேல்மலையனுார் ஒன்றியம், வளத்தியில் ஆர்.எஸ்.எஸ்., நூற்றாண்டு விழா, விஜயதசமி மற்றும் சாங்கிக் பயிற்சி முகாம் நடந்தது. புதுச்சேரி கோட்ட அமைப்பாளர் ராஜதுரை பயிற்சியளித்தார். இதில் பரிவார் அமைப்பில் உள்ள அனைத்து ஆர்.எஸ்.எஸ்., சேவகர்கள் சீருடையில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.