உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் ஆளும் கட்சியினர் மீதும் வழக்கு

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் ஆளும் கட்சியினர் மீதும் வழக்கு

விழுப்புரம்: விழுப்புரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தி.மு.க., வினர் 150 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.விழுப்புரத்தில் நேற்று முன்தினம், தமிழக கவர்னர் ரவியைக் கண்டித்து, தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், நகராட்சி திடலில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான தி.மு.க.,வினர் கலந்துகொண்டனர். இதனால், திருச்சி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தி.மு.க.,வைச் சேர்ந்த 30 பெண்கள் உள்ளிட்ட 150 பேர் மீது, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரத்தில் வழக்கமாக ஆளும் கட்சியினர் நடத்தும் போராட்டம், ஆர்ப்பாட்டங்களின் மீது, வழக்கு பதியாத நிலையில், இந்தமுறை ஆளும் தி.மு.க., வினர் மீதும் வழக்கு போட்டுள்ளது, அரசியல் கட்சியினரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ