உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம்

ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம்

விழுப்புரம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்க மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.விழுப்புரத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் நிர்மலா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பொன்னன், கனி, ராஜேஷ், முருகன், போஸ் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி சிறப்புரையாற்றினார். கணினி இயக்குபவர்கள், வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு இணையான சலுகைகள் துாய்மை பணியாளர்களுக்கும், மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கும் வழங்க வேண்டும். கொரோனா ஊக்க தொகை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காலி பணியிடத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர்களை நியமனம் செய்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்கு அரசாணை வழங்கக் கோரி, ஜூலை 22ம் தேதி கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டமும், வரும் ஆக., 5 ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விக்கிரவாண்டி ஒன்றிய தலைவர் பாலாஜி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ