நண்பர் இறந்த சோகம் வாலிபர் தற்கொலை
வானுார்: நண்பர் இறந்த சோகத்தில் தனியார் நிறுவன ஊழியர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வானுார் அடுத்த பட்டானுார் வசந்தபுரத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன், 26; தாய், தந்தையை இழந்த அவர், தனது பாட்டி உண்ணாமலையின் பராமரிப்பில் இருந்து வந்ததோடு, புதுச்சேரி தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக பணிபுரிந்து வந்தார். அவரது நண்பர் சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால், விரக்தியில் இருந்து வந்த விக்னேஸ்வரன், நேற்று வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.