உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மணல் கடத்தல் : 2 பேர் கைது

மணல் கடத்தல் : 2 பேர் கைது

திருவெண்ணெய்நல்லுார் : மலட்டாறில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.எடையார் கிராம பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மலட்டாறில் இருந்து மணல் கடத்தி வந்த டி.எடையார் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன், 45; அந்தோணி, 40; ஆகிய இருவரையும் கைது செய்து 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை