உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மணல் திருட்டு : ஒருவர் கைது

மணல் திருட்டு : ஒருவர் கைது

விழுப்புரம்: லாரியில் ஆற்று மணல் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகர் மற்றும் போலீசார், நேற்று அதிகாலை கண்டமானடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த வழி யாக வந்த மினி லாரியில் மணல் கடத்தி வந்தது தெரி ய வந்தது. அதனைத் தொடர்ந்து லாரி உரிமையாளரான சாலாமேடு பகுதியைச் சேர்ந்த பழனி மகன் கருணா, 29; மற்றும் டிரைவர் வெங்கடேசன், 35; ஆகியோர் மீது, போலீசார் வழக்குப் பதிந்து லாரியை பறிமுதல் செய்து, கருணாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை