உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக் மீது கார் மோதி தூய்மை பணியாளர் பலி

பைக் மீது கார் மோதி தூய்மை பணியாளர் பலி

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகேசாலையை கடந்த பைக் மீது கார் மோதிய விபத்தில் தூய்மை பணியாளர் பலியானார்.விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டை சேர்ந்தவர் மணி, 55; துாய்மை பணியாளர். நேற்று அதிகாலை 5.30 மணியளவில் பணிக்கு தனது பைக்கில் புறப்பட்டு சாலையை கடந்தார். அப்போது விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி சென்ற கார் இவரது பைக் மீது வேகமாக வந்து மோதியது.விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த மணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர்.இது பற்றி உறவினர் ராஜாங்கம் கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை