மேலும் செய்திகள்
பள்ளி கல்லுாரி செய்திகள்..
03-Mar-2025
கண்டாச்சிபுரம்; ஒதியத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.விழாவிற்கு, வட்டார கல்வி அலுவலர் அஞ்சலா தேவி தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் தமிழரசு, ஊராட்சி தலைவர் அமுதாதேவி வீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சகாய ஆரோக்கியதாஸ் வரவேற்றார். பள்ளி மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது.முன்னதாக பி.இ.ஓ., அஞ்சலா தேவி மாணவ, மாணவிகளிடையே கல்வி மற்றும் ஒழுக்கத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் ராமலிங்கம் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.விழாவில், ஆசிரியப் பயிற்றுனர் ஏழுமலை, ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் ஆறுமுகம், ஜெயக்குமார், புவனேஸ்வரி, புனிதா, ஜோசபின் மேரி செய்தனர். ஜெத்ருத் நித்யா நன்றி கூறினார்.
03-Mar-2025