பள்ளி மாணவர் மாயம்
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அருகே மாயமான பள்ளி மாணவரை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் மனைவி மஞ்சம்மாள்,35: இவரது மகன் கிேஷார்,14. தனது பாட்டி கன்னிகா வீடான விக்கிரவாண்டி அடுத்த சிறுவள்ளிக்குப்பத்தில் தங்கி ராதாபுரம் அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த ஆக., 24 ம் தேதி வீட்டில் கோபித்துக்கொண்டு வெளியில் சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து விக்கிரவாண்டி போலீசில் தாய் மஞ்சம்மாள் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.