உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பள்ளி ஆசிரியர் மாயம்

 பள்ளி ஆசிரியர் மாயம்

திண்டிவனம்: கணவரைக் காணவில்லை என மனைவி, போலீசில் புகார் அளித்துள்ளார். திண்டிவனம் - மரக்காணம் ரோடு விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் எட்வின் பிரகாஷ், 46; மரக்காணம் அடுத்த நல்லாவூர் அரசுப் பள்ளி ஆசிரியர். மாலை நேரங்களில் இசைக் கச்சேரியில் பங்கேற்று வந்தார். கடந்த 28ம் தேதி காலை 11:30 மணியளவில், மனைவி நான்சிராணியிடம், கச்சேரிக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது மொபைல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நான்சிராணி, 44; அளித்த புகாரின்பேரில், திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை