உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பூப்பந்து போட்டியில் பள்ளி மாணவி அசத்தல்

பூப்பந்து போட்டியில் பள்ளி மாணவி அசத்தல்

விக்கிரவாண்டி: தேசிய அளவிலான, 44 வது சப்-ஜூனியர் பூப்பந்து விளையாட்டு போட்டி, திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லூரியில் நடைபெற்றது. அதில் தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளிலிருந்து மொத்தம், 10 பேர் பங்கேற்றனர். அந்த போட்டியில், விழுப்புரம் மாவட்டத்தின் சார்பாக முட்டத்துார் ஒய்காப் மேல்நிலைப்பள்ளியில், 9 ம் வகுப்பு படிக்கும் மாணவி ராஜஸ்ரீ, 14; இரட்டையர் மற்றும் குழு போட்டியில் பங்கேற்று முதலாமிடம் பிடித்து இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றார். மாணவிக்கு திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி நிர்வாகி சூர்யா, தமிழ்நாடு பூப்பந்து விளையாட்டு கழக செயலாளர் விஜய் ஆகியோர் மாணவிக்கு பதக்கங்கள், சான்றுகளை வழங்கி பாராட்டினர். பதக்கம் வென்ற மாணவியை வேலுார் சி.எஸ்.ஐ., பேராயர் ஹென்றி ஷர்மா நித்தியானந்தம், தாளாளர் ஸ்டான்லி ஜோன்ஸ், தலைமை ஆசிரியர் டேவிட் சுரேஷ் பாபு ,உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார் உள்ளிட்டோர் மாணவியை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை