உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவி மாயம்

விழுப்புரம்: பள்ளி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். விழுப்புரம் அடுத்த சோழகனுார் கிராமத்தை சேர்ந்த முத்தழகன் மகள் சந்தியா, 16; இவர், எடப்பாளையம் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 22ம் தேதி தும்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர், காணாமல் போனார். பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், போலீசில் புகாரளித்தனர். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !