உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இரண்டாம் நிலை காவலர் பணி நாளை தேர்வு : 10,859 பேர் பங்கேற்பு

இரண்டாம் நிலை காவலர் பணி நாளை தேர்வு : 10,859 பேர் பங்கேற்பு

விழுப்புரம்: இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு நாளை நடைபெற உள்ள தேர்வில் 10 ஆயிரத்து 859 பேர் பங்கேற்கின்றனர். எஸ்.பி., சரவணன் செய்திக்குறிப்பு: தமிழக சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் 3,665 இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி எழுத்துத் தேர்வு நாளை 9ம் தேதி நடக்கிறது. டி.ஐ.ஜி., உமா மேற்பார்வையில், தேர்வு கண்காணிப்பாளர்கள், தேர்வு அறை காவலர்கள், ஏ.டி.எஸ்.பி.,க்கள் மற்றும் 6 டி.எஸ்.பி.,க்கள் என 1,300 போலீசார் தேர்வு பணியில் ஈடுபடுகின்றனர். மொத்தம் 10 ஆயிரத்து 859 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரி, விழுப்புரம் அரசு சட்டக்கல்லுாரி, விழுப்புரம் ரங்கசாமி லே அவுட் ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கப்பியாம்புலியூர் சிகா கல்விக் குழுமம், விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி, ரங்கநாதன் லே அவுட் வி.ஆர்.பி., மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம் ஜெயே ந் திர சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் நடக்கிறது. தேர்வாளர்கள் காலை 8:00 மணிக்கு தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். எழுத்து தேர்வுக்கு வரும் நபர்கள் ஹால் டிக்கெட், கருப்பு நிற பந்து முனை பேனாக்கள், ஏதேனும் ஒரு அடையாள அட்டை ஆகியவைகளுடன் வர வேண்டும். காலை 9:30 மணிக்குமேல் தேர்வு எழுத வரும் நபர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச், ப்ளூடூத், கால்குலேட்டர் போன்ற எந்த ஒரு வகையான எலக்ட்ரானிக் பொருட்கள் அனுமதிக்கப்படமாட்டாது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ