உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செம்மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல் மரக்காணத்தில் பரபரப்பு

செம்மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல் மரக்காணத்தில் பரபரப்பு

மரக்காணம்: மரக்காணம் அருகே வருவாய் அதிகாரி பறிமுதல் செய்த வாகனத்தை, செம்மண் கடத்தியவர்களே மிரட்டி எடுத்துச் சென்றதால் பரபரப்பு நிலவியது. மரக்காணம் அடுத்த கந்தாடு ஏரியில், அனுமதியின்றி ஜே.சி.பி., மூலம் டிராக்டர்களில், செம்மண் கடத்தப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு நேற்று காலை புகார் வந்தது. அதனைத் தொடர்ந்து மரக்காணம் வருவாய் ஆய்வாளர் வனமயில், ஏரிக்கு நேரில் சென்று, அங்கு செம்மண் திருட்டில் ஈடுபட்டதாக 8 டிராக்டர்கள், 2 ஜே.சி.பி., ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு, மண் கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தினார். இதனையடுத்து, போலீசாருக்கும், மாவட்ட உயரதிகாரிகளுக்கும், அவர் தகவல் அளித்தார். இந்நிலையில், மண் கடத்திய டிராக்டர் உரிமையாளர்கள் விரைந்து வந்து, வருவாய் ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்டதோடு, அங்கிருந்த டிராக்டர்களையும் எடுத்துக் கொண்டு தப்பினர். இதனால், விரக்தியடைந்த வருவாய் ஆய்வாளர் வனமயில், கந்தாடு சாலையில் அமர்ந்து, இங்கிருந்து தப்பியவர்கள், டிராக்டரை மீண்டும் கொண்டு வந்து சரண் அடைய வேண்டும் என அவகாசம் கூறி, போராட்டத்தில் ஈடுபடுவது போன்று காத்திருந்தார். ஒரு மணி நேரத்திற்கு பிறகு, 4 டிராக்டர்கள், 1 ஜே.சி.பி., மட்டும் கொண்டு வந்தனர். அதனை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை