டி.எஸ்.பி., அலுவலகம் இடம் தேர்வு
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் டி.எஸ்.பி., அலுவலகம் கட்டுவதற்கான இடத்தை எஸ்.பி., தீபக் சிவாச் பார்வையிட்டார்.விக்கிரவாண்டி போலீஸ் குடியிருப்பில் டி.எஸ்.பி., அலுவலகம் அலுவலகம், பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகே மகளிர் போலீஸ் ஸ்டேஷன் கட்டவும் இடத்தை தேர்வு செய்து பார்வையிட்டார். மேலும், கூடுதலாக அடைக்கலாபுரம் பகுதியில் புதிய கோர்ட் வளாகம் அருகே உள்ள இடத்தையும் பார்வையிட்டார். ஏ.டி.எஸ்.பி., திருமால், டி.எஸ்.பி., நந்தகுமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.