உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்

 அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அன்னியூர் கலைஞர் கருணாநிதி அரசு கல்லுாரியில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) அசோகன் தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் அருணாச் சலம் வரவேற்றார். அரிய புத்திரன் முன்னிலை வகித்தார். பேராசிரியை ஜெயந்தி நோக்கவுரையாற்றினார். பேராசிரியர்கள் சுவாமிநாதன், முகமது உசேன், சதீஷ்குமார் கருத்துரை வழங்கினர். அப்போது, பேராசிரியர்கள் ராசு, கிரிஷ்வர், ரேவதி, விஜயலட்சுமி மற்றும் கோவிந்தராசு உட்பட பலர் பங்கேற்றனர். கண்காணிப்பாளர் ரகுபதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ