உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் மகளிர் கல்லுாரியில் கருத்தரங்கு

விழுப்புரம் மகளிர் கல்லுாரியில் கருத்தரங்கு

விழுப்புரம் : விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில், கணினி அறிவியல்துறை கருத்தரங்கு நடந்தது. 'உண்மையான உலக தொழில்நுட்ப திறன்கள் மற்றும் தொழில்துறை எதிர்பார்ப்புகள்' என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சியில், சென்னை அறிவாற்றல் தொழில்நுட்ப தீர்வுகளின் ஏற்பாட்டு ஆய்வாளர் மீனா சிறப்புரையாற்றினார். கணினி அறிவியல்துறை மாணவிகள் பேரவை தலைவி யாமினி வரவேற்றார். முதுகலை மற்றும் ஆராய்ச்சி கணினி அறிவியல் துறை முன்னாள் மாணவிகள் செயல்பாடு அறிக்கை குறித்து விளக்கப்பட்டது. கணினி அறிவியல் துறை மாணவிகள் பங்கேற்றனர். கணினி பயன்பாடு துறை மாணவிகள் பேரவை தலைவி நிஷா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை