கருத்தரங்கம்
விழுப்புரம்; விழுப்புரம் அடுத்த அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பாலின உளவியல் குறித்த கருத்தரங்கம் நடந்தது . கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) அசோகன் தலைமை தாங்கினார். பேராசிரியர் பாபு வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் அமைப்பு தலைவர் அரியபுத்திரன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் சுமதி நோக்கவுரையாற்றினார். அன்னியூர் அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை டாக்டர் நிவாஸ், பாலின உளவியல் தொடர்பாக சிறப்புரையாற்றினார்.ஆசிரியர் கோவிந்தராசு, பேராசிரியர்கள் மணவாளன், ரங்கநாதன், சின்னதுரை மற்றும் ரம்யா, ரேவதி, கிரிஷ்வர், ராசு, விஜயலட்சுமி உ ட்பட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். பேராசிரியர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.