மேலும் செய்திகள்
தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் பலி
13-Apr-2025
தெரு நாய்கள் கடித்ததில் மூன்று ஆடுகள் பலி
10-Apr-2025
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 28ம் தேதி முதல் அனைத்து ஆடுகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடக்கிறது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:தமிழகத்தில் மத்திய அரசால் செயல்படுத்தப்படும், நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டிற்கு, செம்மறி ஆடுகளுக்கு தடுப்பூசி பணி செயல்படுத்திட சென்னை கால்நடை பராமரிப்பு மருத்துவத்துறை இயக்குநர் அறிவுரை வழங்கியுள்ளார்.அதன்படி, விழுப்புரம் மாவட்டத்திற்கு ஆடுகளுக்காக 2 லட்சத்து 26 ஆயிரத்து 300 டோஸ்கள் தடுப்பூசி மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆடுகள் வளர்ப்பில் ஆட்டுக்கொல்லி நோய் என்பது விவசாயிகளுக்கு பெரும் சவலாக உள்ளது.பொதுவாக, இந்நோய் தாக்கி ஆடுகள் இறப்பதால், கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது.எனவே, ஆடுகள் இறப்பினை தடுப்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், சினையுற்ற ஆடுகள் தவிர, 4 மாதங்களுக்கும் மேல் உள்ள அனைத்து செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகளுக்கும், ஆண்டுக்கு ஒருமுறை என்ற அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் பணி, கால்நடை பராமரிப்புத்துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.இதனால், வரும் 28 முதல் மே 27ம் தேதி வரை 30 நாட்கள் நடைபெற உள்ள இத்தடுப்பூசி முகாமில், கால்நடை மருத்துவ குழுவினருக்கு ஒத்துழைப்பு அளித்து, கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள், தங்களது கால்நடைகளுடன் தடுப்பூசி முகாமில் பங்கேற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
13-Apr-2025
10-Apr-2025