உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம் பஸ் நிலையத்தில் ரூ.4.23 கோடியில் கடைகள்

திண்டிவனம் பஸ் நிலையத்தில் ரூ.4.23 கோடியில் கடைகள்

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சி பஸ் நிலையத்தில் 4.23 கோடி ரூபாய் மதிப்பில் கடைகள் கட்டப்பட உள்ள இடத்தை மஸ்தான் எம்.எல்.ஏ., பார்வையிட்டார்.திண்டிவனம் நகராட்சி இந்திரா காந்தி பஸ் நிலையத்தில், நகராட்சி சார்பில் கட்டப்பட்டிருந்த கடைகள், இடிந்து விழும் நிலையில் இருந்ததால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கடைகள் அடியோடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.இடிக்கப்பட்ட இடத்தில், நகராட்சி சார்பில் புதியதாக கடைகள் கட்டுவதற்காக ரூ.4 கோடியே 23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதியதாக கடைகள் கட்டப்பட உள்ள இடத்தை, மஸ்தான் எம்.எல்.ஏ., பார்வையிட்டார்.இதேபோல் பழைய நகராட்சி அலுவலகத்தை இடித்து விட்டு, 77 லட்சம் ரூபாய் செலவில் வணிக வளாகம் கட்ட உள்ள இடத்தையும் பார்வையிட்டார். நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், நகராட்சி கமிஷனர் குமரன், நகரமன்ற துணை தலைவர் ராஜலட்சுமி, தி.மு.க., நகர செயலாளர் கண்ணன், மயிலம் ஒன்றிய செயலாளர் மணிமாறன், முன்னாள் நகர செயலாளர் கபிலன், வர்த்தகர் அணி துணை தலைவர் பிரகாஷ், வழக்கறிஞர் அசோகன், கவுன்சிலர்கள் பாபு, அரும்பு குணசேகரன்,, பிர்லாசெல்வம், பாஸ்கர், சத்தீஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ