உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிகா பள்ளி மாவட்ட அளவில் அசத்தல்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிகா பள்ளி மாவட்ட அளவில் அசத்தல்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள கப்பியாம்புலியூர் சிகா மேல்நிலை பள்ளி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி சாதனை படைத்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கப்பியாம்புலியூர் சிகா மேல்நிலை பள்ளி மாணவர் ஸ்ரீகாந்த் 500க்கு 495 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளார். மாணவி பவ்யா 492 மதிப்பெண்ணும், மாணவர் கோபாலகிருஷ்ணன் 480 மதிப்பெண் பெற்றுள்ளனர். 480 மதிப்பெண்ணிற்கு மேல் 11 மாணவர்கள் பெற்றுள்ளனர். பாடம் வாரியாக 5 மாணவர்கள் கணித பாடத்திலும், அறிவியல் 11 பேர், சமூக அறிவியல் ஒரு மாணவர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண்களை மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளை சிகா கல்வி அறக்கட்டளை தலைவர் சாமிநாதன், முதல்வர் கோபால் பாராட்டி கவுரவித்தனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி ஊழியர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை