சிலம்பம், மல்லர் கம்பம் பள்ளி மாணவர்கள் சாதனை
விழுப்புரம் : விழுப்புரம் பள்ளி மாணவர்கள் சிலம்பம், மல்லர் போட்டிகளில் சாதனை படைத்து வருகின்றனர். விழுப்புரம், டி.இ.எல்.சி., நடுநிலைப்பள்ளியில், 8ம் வகுப்பு சுதர்சன் படிக்கிறார். இவர் மாவட்ட அளவிலான மல்லர் கம்பம் போட்டியில், தொடர்ந்து 'சாம்பியன்' பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த போட்டியில் சாம்பியன் வென்றார். தொடர்ந்து மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் சாதித்து வருகிறார்.அதே போல், இப்பள்ளியில் 7 ம் வகுப்பு படிக்கும் மாணவர் கோகுல்ராஜ், தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்று, 2வது இடத்தை பிடித்து சாதித்துள்ளார். போட்டிகளில் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை, தலைமை ஆசிரியர் அருள் ஜான்சன், ஆசிரியர் எலியாஸ் ஜெகாந்தன் உட்பட ஆசிரியர்கள் பலரும் பாராட்டி, வாழ்த்தினர்.