உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பூத்தமேடு நெடுஞ்சாலை சந்திப்பில் சோலார் ஐமாஸ் விளக்கு

பூத்தமேடு நெடுஞ்சாலை சந்திப்பில் சோலார் ஐமாஸ் விளக்கு

விழுப்புரம்: பூத்தமேடு நெடுஞ்சாலை சந்திப்பில், முதல் முறையாக சோலாரில் இயங்கும் ஐமாஸ் விளக்கு மற்றும் சி.சி.டி.வி., கேமரா கண்காணிப்பு துவங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே செஞ்சி, திருவண்ணாமலை நெடுஞ்சாலை பிரியும் பூத்தமேடு சந்திப்பில், அதிகளவு வாகனங்கள் செல்வதால், அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. அந்த இடத்தில், போதிய மின் விளக்குகள் இல்லாததால் வெளிச்சமின்றியும், சாலை குறுகிய நிலையில் முக்கிய நெடுஞ்சாலை சந்திப்பு வருவதால், வி பத்துகள் தொடர்ந்தன. இந்த தொடர் விபத்துகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். பூத்தமேடு நெடுஞ்சாலை சந்திப்பில், அதிநவீன சோலார் உயர் கோபுர மின் விளக்கு தற்போது அமைக்கப்பட்டது. அதனுடன், வைபை இணைப்புடன் இயங்கும் சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டது. விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் நிதி உதவியோடு, காவல் துறை சார்பில் ரூ.5 லட்சம் செலவில், அங்கு சாலை மைய தடுப்பு கட்டையுடன் கூடிய, சோலார் மின் உற்பத்தியில் இயங்கும் உயர் கோபுர மின் விளக்குகள் மற்றும் அதனருகே 3 சாலைகளையும் தானியியங்கியாக கண்காணிக்கும் 3 சி.சி.டி.வி., கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. விழுப்புரம் எஸ்.பி., சரவணன், உயர்கோபுர மின் விளக்கு மற்றும் சி.சி.டி.வி., கேமராவை பயன்பாட்டுக்கு துவக்கி வைத்து பார்வையிட்டார். ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார் குப்தா, கோலியனுார் பி.டி.ஓ., ஜெகநாதன், தாலுகா இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், போக்குவரத்து இன்ஸ்பெக் டர் வசந்த், சப் இன்ஸ்பெக்டர்கள் குமாரராஜா, விஜயரங்கம், தென்னமாதேவி ஊராட்சி தலைவர் ரோஜாரமணி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். தானியங்கியாக செயல்படும் இந்த சி.சி.டி.வி., கேமரா கண்காணிப்பு, விழுப்புரம் உட்கோட்ட காவல்துறை மற்றும் போக்குவரத்து போலீஸ் மூலம் மொபைல் போன் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை