உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தந்தையை தாக்கிய மகன் கைது

தந்தையை தாக்கிய மகன் கைது

திண்டிவனம்: நிலம் பிரச்னை தொடர்பாக தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் அடுத்த நீர்பெருத்தகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி, 70; இவரது மகன் வெங்கடேசபெருமாள், 35; இருவருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வந்தது. நேற்று முன்தினம் மாம்பாக்கம் கூட்ரோடு அருகே குப்புசாமி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த வெங்கடேசபெருமாள், தந்தையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், வெங்கடேசபெருமாள் மீது வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை