ரயில் நிலையத்தில் எஸ்.பி., திடீர் ஆய்வு
விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில், எஸ்.பி., சரவணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், எஸ்.பி., சரவணன் தலைமையில் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ரயில் நிலைய வளாகத்தில் இருந்த பொதுமக்களிடம், வெளிச்சமான பகுதிக்கு சென்று காத்திருக்குமாறு, போலீசார் அறிவுறுத்தினர். மேலும், பெண்கள், சிறுவர்கள் தனியாக நிற்காமல், பயணிகள் கூட்டமாக உள்ள பிளாட்பார பகுதிக்கு செல்லுமாறும் தெரிவித்தனர்.விழுப்புரம் ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார் குப்தா, ஆயுதப்படை டி.எஸ்.பி., ஞானவேல், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த், சப் இன்ஸ்பெக்டர்கள் குமாரராஜா, விஜயரங்கம் உடனிருந்தனர்.