உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருட்டு வழக்கில் குற்றவாளிகள் கைது போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு

திருட்டு வழக்கில் குற்றவாளிகள் கைது போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு

விழுப்புரம்: ஏ.டி.எம்., மையத்தில் பணம் மற்றும் பைக் திருட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை, எஸ்.பி., பாராட்டினார்.விழுப்புரத்தில் கடந்த ஜூன், 12ம் தேதி ஏ.டி.எம்., மையத்தில் தகடு வைத்து பணம் திருடிய வட மாநில வாலிபர்கள் நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விரைவாக குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் லியோ சார்லஸ், ஏட்டுகள் மகாராஜா, பாலமுருகன், குமரகுருபரன், நீலமேகம், சத்தியம் மற்றும் காவலர் அருள் ஆகியோரை எஸ்.பி., சரவணன் பாராட்டினார்.இதேபோன்று, திண்டிவனம் சஞ்சீவீராயன் பேட்டையில் பைக் திருட்டில் ஈடுபட்ட மூன்றுபேரை தனிப்படை போலீசார் கைது செய்து, 10 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.விரைவாக குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை சிறப்பு எஸ்.ஐ., அய்யப்பன், ஏட்டுகள் ஜனார்த்தனன், கோபாலன், முதல் நிலை காவலர் செந்தில் முருகன், கோபாலகிருஷ்ணன் மற்றும் சிரஞ்சீவி ஆகியோரையும் அவர் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை