உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வதந்தி பரப்ப வேண்டாம் எஸ்.பி., எச்சரிக்கை

வதந்தி பரப்ப வேண்டாம் எஸ்.பி., எச்சரிக்கை

விழுப்புரம்: வானுாரில் இரு தரப்பு மோதல் குறித்து, சமூக வலை தளங்களில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என போலீஸ் எச்சரித்துள்ளது.விழுப்புரம் எஸ்.பி., சரவணன் செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டம், வானுார் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில், பெண் பயிற்சி வழக்கறிஞர் மற்றும் அவரது சகோதரிகள் தாக்கப்பட்டதாகவும், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சமூக வலை தளங்களில் வீடியோ வெளியானது.இச்சம்பவம் குறித்து, அன்றே புகார் பெறப்பட்டு விசாரணை செய்தததில், புகார்தாரரும், எதிர் தரப்பினரும் உறவினர்கள் என்பதும், நிலம் தொடர்பாக எழுந்த பிரச்னையில், இரு தரப்பு பெண்களும் தங்களுக்குள் தாக்கிக்கொண்டதில், எதிர் தரப்பு பெண், புகார்தாரரின் கன்னத்தில் கடித்ததில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே, புகார்களின் அடிப்படையில், வானுார் காவல் நிலையத்தில் இரு தரப்பு மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக, சமூக வலை தளங்களில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி