பூத காளியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை
வானுார் ஞானக்கல்மேடு பூத காளியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது.கிளியனுார் அடுத்த ஞானக்கல்மேடு கிராமத்தில் ஸ்ரீ சுயம்பு பூத காளி அம்மன் கோவிலில், பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு தீச்சட்டி எடுத்தல் விழா நடந்தது.சுற்று வட்டாரத்தை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு தீச்சட்டி எடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.அதனை தொடர்ந்து, அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை முன் னாள் ஒன்றிய சேர்மன் சிவா தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர். விழாவில் உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.