உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காணையில் சிறப்பு முகாம்

காணையில் சிறப்பு முகாம்

விழுப்புரம் : காணையில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. செந்தமிழ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமிற்கு, ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி தலைமை தாங்கினார். இதில், காணை, குப்பம், அகரம் சித்தாமூர், கருங்காலிப்பட்டு ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். நிகழ்ச்சியில், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் கல்பட்டு ராஜா, முருகன், ஒன்றிய துணை சேர்மன் வீரராகவன், மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார் மற்றும் பி.டி.ஓ.,க்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி