சான்றிதழ் பெற சிறப்பு முகாம்
திண்டிவனம்: பெஞ்சல் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கிராமங்களில் சான்றிதழ்கள், வாக்காளர்அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட சான்றிதழ்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது.முகாமில், திண்டிவனம் தாசில்தார் சிவா, வட்ட வழங்கல் அதிகாரி உஷாராணி தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முகாமில் சான்றிதழ் வழங்குவதற்காக பாதிக்கப்பட்ட பொது மக்கள் சார்பில் மனுக்கள் பெறப்பட்டு, மேல்நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.