உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வேதபுரி சாயிபாபா கோவிலில் சிறப்பு பூஜை

வேதபுரி சாயிபாபா கோவிலில் சிறப்பு பூஜை

வானுார் : பட்டானுார் ஸ்ரீ வேதபுரி சாயிபாபா கோவிலில், சீரடி சாயிபாபா 106ம் ஆண்டு மகா சமாதி அடைந்த தினத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு, கொடியேற்றமும், 9:15 மணிக்கு துவாரகா பூஜையும் நடந்தது. தொடர்ந்து நாம ஜெயமும், புஷ்பாஞ்சலியும் நடந்தது. மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி மற்றும் இரவு 8:00 மணிக்கு ஆர்த்திகள் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரினசம் செய்தனர்.நிகழ்ச்சியையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை