உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அதிவேகமாக பைக் ஓட்டியவர் கைது

அதிவேகமாக பைக் ஓட்டியவர் கைது

விழுப்புரம் டவுன் சப் - இன்ஸ்பெக்டர் சிவானந்தகுமார் மற்றும் போலீசார், நேற்று அரசு மகளிர் மேல்நிலை பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக அதிவேகமாகவும், போக்குவரத்திற்கு இடையூறாகவும் ஸ்கூட்டர் ஓட்டி வந்த சித்தேரிக்கரையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 24; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர். பெண்ணைத் தாக்கிய 3 பேர் மீது வழக்கு காணை அடுத்த சாணிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரவணன் மனைவி தமிழ்செல்வி, 33; அழகுநாதன் மனைவி மலர், 60; இவரது மகன் ரமேஷ், 35; விஜி மனைவி ரேவதி, 37; உறவினர்கள் உறவினர்கள். இவர்களுக்கு, இங்கு தலா ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. இதில், தமிழ்ச்செல்வி 40 சென்ட் புறம்போக்கு நிலத்தை அனுபவித்து வருகிறார். இந்த நிலத்தில் பாகம் கேட்டு, கடந்த 7ம் தேதி மலர் உட்பட 3 பேரும் தமிழ்ச்செல்வியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். காணை போலீசார் மலர் உட்பட மூவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். ஆற்றில் மூழ்கி பெண் பலி உளுந்தூர்பேட்டை அடுத்த அ யன்வேலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகள் ஷர்மிளா, 20; நேற்று குடும்பத்துடன் அரகண்டநல்லுார் அடுத்த ஆற்காடு, வீரமடை, ஐயனார் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். அப்போது, அருகே தென்பெண்ணை ஆற்றில் ஷர்மிளா குளித்தபோது சுழலில் சிக்கினார். உடன் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஷர்மிளாவை மீட்டு முகையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். அ ரகண்டநல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர். லாட்டரி சீட்டு விற்றவர் கைது திருவெ ண்ணெய்நல்லுார் அடுத்த மனக்குப்பம் பஸ் நிறுத்தம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற பாவந்துார் மதுரா மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை, 36; என்பவரை அப்பகுதியில் ரோந்து சென்ற சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் கைது செய்து லாட் டரி சீட்டுகளை பறிமுதல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை