ப.வில்லியனுார் லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் சிரவண தீபம்
விழுப்புரம்:ப.வில்லியனுார் லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் சிரவண தீபம் ஏற்றப்பட்டது.விழுப்புரம் அடுத்த ப.வில்லியலுாரில் கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், சிரவணதீபம் ஏற்றும் வழிபாடு நடந்தது.திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று மாலை 2.00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கும், உற்சவர் பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடந்தது. இதனை தொடர்ந்து மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கனகவல்லி தாயாருடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.தொடர்ந்து, ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மாலை 4.00 மணிக்கு கோவில் உட்புறப்பாடு நடந்தது. ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் பெருமாள் மாலை 5 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் கருட கம்பம் எதிரில் எழுந்தருளினார்.இதனையடுத்து, கோவில் வளாகத்தில் மாலை 5.30 சிரவண தீபம் ஏற்றப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.