உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுாரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. திருக்கோவிலுார் தொகுதிக்குட்பட்ட சிறுமதுரை, சின்னசெவலை, டி.எடையார், மழவராயனூர் ஆகிய ஊராட்சிகளுக்கு நடந்த முகாமிற்கு, பி.டி.ஓ., பாலசுப்ரமணியன், முல்லை ஆகியோர் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் விஸ்வநாதன், ஒன்றிய சேர்மன் ஓம்சிவ சக்திவேல், துணைச் சேர்மன் கோமதி நிர்மல் ராஜ் முன்னிலை வகித்தனர். தாசில்தார் செந்தில்குமார் வரவேற்றார். முகாமில் பொன்முடி எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்று மகளிர் உரிமைத்தொகை, பட்டா பெயர் மாற்றம், மின் இணைப்பு, பெயர் மாற்றம், ரேஷன் கார்டு உள்ளிட்ட 15 துறைகள் சார்ந்த பொது மக்களிடம் மனுக்களை பெற்று அதற்கு விரைவில் தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நிகழ்ச்சியின் இறுதியாக பயனாளிகளுக்கு புதிய ரேஷன் கார்டு, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், தோட்டக்கலைத் துறை சார்பில் பாரம்பரிய விதைகள் வழங்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அழகிரி கட்சி நிர்வாகிகள் பக்தவச்சலம், வெங்கடேசன், விசுவநாதன், கிருஷ்ணமூர்த்தி, கைரா சடகோபன், கிருஷ்ணராஜ் மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ