உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உங்களுடன் ஸ்டாலின் முகாம்..

உங்களுடன் ஸ்டாலின் முகாம்..

விழுப்புரம்:மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் தொடங்கப்பட்டு நகரம், ஒன்றியங்கள், கிராமங்கள் வாரியாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதன்படி, விழுப்புரம் நகராட்சி சார்பில், விழுப்புரம் கிழக்கு பாண்டிசாலை, தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முகாம் நடந்தது. நகர மன்ற தலைவர் தமிழ்செல்வி பிரபு தொடங்கி வைத்து பார்வையிட்டார். நகராட்சி கமிஷனர் வசந்தி, தாசில்தார்கள் கனிமொழி, ஆதிசக்தி,ஆனந்தன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். இதே போல், வானுார் ஒன்றியம் பெரும்பாக்கம், தனியார் மண்டபத்தில், முகாமை ஒன்றிய சேர்மன் முரளி தொடங்கி வைத்தார். பி.டி.ஓ.,க்கள் சுபாஷ்சந்திரபோஸ், மணிவண்ணன் உள்ளிட்ட துறை அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். பொது மக்கள் பலர் கலந்துகொண்டு மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை