மேலும் செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
10-Sep-2025
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கோலியனூர் ஒன்றியம் பிடாகம் ஊராட்சியில் அரசின் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. தி.மு.க., மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்து, பார்வையிட்டார். அப்போது, பட்டா மாற்றம், மகளிர் உரிமை தொகை, முதியோர் பென்ஷன் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களுடன் வந்த பெண்களிடம் மனுக்களை பெற்று விசாரித்து, அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம், எம்.எல்.ஏ., அறிவுறுத்தினார். இந்த முகாமில், கோலியனுார் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், தாசில்தார் கனிமொழி, கோலியனுார் பி.டி.ஓ., ஜெகநாதன் மற்றும் அலுவலர்கள், இளைஞரணி அமைப்பாளர் தினகரன், மாவட்ட வர்த்தக அணி அரிராமன், ஊராட்சி தலைவர் அய்யனார், துணை தலைவர் சூரியா, ராஜா, மக்களன்பன், குபேந்திரன், பாபு, கண்ணன், சொக்கலிங்கம், குழந்தை மணி, சுந்தரமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
10-Sep-2025