உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உங்களுடன் ஸ்டாலின் முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

உங்களுடன் ஸ்டாலின் முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

விழுப்புரம், ;கோலியனுார் அடுத்த அய்யங்கோவில்பட்டு ஊராட்சியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடந்தது. முத்தாம்பாளையம் சமுதாய கூடத்தில் நடந்த முகாமை, லட்சுமணன் எம்.எல்.ஏ., குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசினார். முகாமில், மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் வந்திருந்த பொதுமக்களிடம் விசாரித்து, அதனை பதிவு செய்திட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து, முகாமில் நடந்த மருத்துவ முகாமை ஆய்வு செய்து, கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். தி.மு.க., கோலியனுார் ஒன்றிய செயலாளர் கப்பூர் ராஜா, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், பி.டி.ஓ., கார்த்திகேயன், தாசில்தார்கள் வேல்முருகன், செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் கேசவன். மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசு, அவைத் தலைவர் ராமகிருஷ்ணன், ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயா பன்னீர்செல்வம், துணை சேர்மன் உதயகுமார், ஒன்றிய கவுன்சிலர் பட்டுஆறுமுகம். ஊராட்சி தலைவர்கள் சத்தியா ராஜேந்திரன், பாலமுருகன், தனசேகரன், கிளை செயலாளர்கள் ராஜேந்திரன், தெய்வநாயகம், நாகராஜ், சுந்தரவேல், ராகுல், நடராஜ், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் மக்களன்பன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி