மேலும் செய்திகள்
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்
16-Aug-2025
செஞ்சி:நெகனுார் ஊராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமை மஸ்தான் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். வல்லம் ஒன்றியம் நெகனுார் ஊராட்சியில், நெகனுார், ஈச்சூர், வடபுத்துார், அவியூர், கடம்பூர் ஊராட்சிகளை சேர்ந்த பொது மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் ராமதாஸ், இளங்கோவன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் சித்ரா ஜெயசங்கர் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் குடும்ப அட்டை, இலவச வீட்டு மனை பட்டா, பாட்டா மாற்றம், முதியோர் உதவி தொகை, மகளிர் உரிமை தொகை கேட்டு மக்கள் மனு அளித்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, மாவட்ட அவைத்தலைவர் சேகர், தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, துரை, இளம்வழுதி, மாவட்ட கவுன்சிலர் அன்புசெழியன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
16-Aug-2025