உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

கண்டமங்கலம்: நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் கெங்கராம்பாளையம் ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் நேற்று நடந்தது. லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமையேற்று, குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்து, ஆய்வு செய்தார். கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் வாழ்த்தி பேசினார். மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார், இணை இயக்குனர் டாக்டர் லதா (பொறுப்பு) ஆகியோர் முன்னிலை வகித்தனர் . சிறுவந்தாடு வட்டார மருத்துவ அலுவலர் ஆர்த்தி வரவேற்றார். முகாமில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி லட்சுமிநாராயணா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளை சேர்ந்த நிபுணர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் நோயாளிகளை பரிசோதித்து மருந்து மாத்திரைகள் மற்றும் ஆலோசனை வழங்கினர். நிகழ்ச்சியில் கண்டமங்கலம் மேற்கு ஒன்றிய தி.மு.க., துணை செயலாளர் ராஜசேகர், ஊராட்சி தலைவர்கள் அய்யனார், பக்தவச்சலம், சீத்தா மலையாளம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அன்பரசு, மாவட்ட சிறுபான்மையினர் அணி தலைவர் தாஹிர், கிளைச் செயலாளர்கள் முத்துசாமி, செந்தில்குமார், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் பாலுகார்த்திக், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், தொல்காப்பியன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முருகு இளங்கோவன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் மோகன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இம்முகாமில் கண்டமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட 46 ஊராட்சிகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். டாக்டர் சத்திரபதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை