உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக் விபத்தில் மாணவர் பலி

பைக் விபத்தில் மாணவர் பலி

விழுப்புரம்: வளவனுார் அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில் பொறியியல் கல்லுாரி மாணவர் இறந்தார்.வளவனுார் அருகே அற்பிசம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத்குமார் மகன் ராகுல், 22; இவர், நேற்று முன்தினம் தனது நண்பர் பசுபதி, 20; என்பவரை பைக்கில் ஏற்றி கொண்டு விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்றார். கெங்கராம்பாளைம் டோல்கேட் அருகே சென்றபோது, எதிரே வந்த வேன் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் ராகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த பசுபதி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இறந்த ராகுல், புதுச்சேரி மாநிலம், மதகடிப்பட்டு தனியார் பொறியியல் கல்லுாரியில் பி.இ., மூன்றாம் ஆண்டு படித்துவந்தார்.விபத்து குறித்து வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை